Homeசெய்திகள்தமிழ்நாடுசீர்காழியில் "13 வது தேசிய வாக்காளர் தின" விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் “13 வது தேசிய வாக்காளர் தின” விழிப்புணர்வு பேரணி

-

- Advertisement -

சீர்காழியில் 13 வது தேசிய வாக்காளர் தின” விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட தினமான ஜனவரி மாதம் 25ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 13வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, பேரணியை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து,  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாகச் சென்ற மாணவ மாணவிகள் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல், 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல், வாக்குரிமை நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு  சென்ற பேரணி மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது.

முன்னதாக கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார்  உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

MUST READ