spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

-

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவர் ஹரிபிரசாத் (15). இவர் விடுமுறை தினத்தையொட்டி தனது நண்பரான பிரவீன் உள்ளிட்டோருடன் திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். காவிரி படித்துறை அருகே ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக
இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

we-r-hiring

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஹரிபிரசாத், பிரவீன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து உடல்களை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘

 

MUST READ