spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப் போக்கு

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப் போக்கு

-

- Advertisement -

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப் போக்கு

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 25 பேருக்கு வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். அந்த பரபரபரப்பே குறையாத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள மிஸ்டர் பர்கர் என்ற உண்வகத்தில் பர்கர் சாப்பிட்ட சஞ்சய் என்ற இளைஞருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மேலும் அந்த கடையில் பர்க்கர் சாப்பிட்ட 8 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

we-r-hiring

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையில் நேற்று இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்கின்ற கடையிலிருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு வட மாநில இளைஞர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மட்டும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிக்கன் ரைஸ்

MUST READ