Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவமனையில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு; உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

மருத்துவமனையில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு; உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

-

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மொத்தம் உள்ள 16. மருத்துவர்களில் இன்று எந்தவித அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் மருத்துவர் பிரபா வடிவுகரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷாபாலாஜி, காது தொண்டை மூக்கு (ENT) சிறப்பு மருத்துவர் கிருத்திகா , ஆகியோரை சஸ்பென்ஸ் செய்யவும் மாதத்திற்கு, ஒரு முறையாவது மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்து மூன்று மாதங்களாகிறது.

ஆகவே அவர் மீதும் துறை ரீதியாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவா மணியை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

MUST READ