spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!

ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!

-

- Advertisement -

 

chennai omni bus

we-r-hiring

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் 5% குறைத்து வசூலிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

நவம்பரில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம்

ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. நான் ஏசி சீட்டர், நான் ஏசி ஸ்லீப்பர், ஏசி சீட்டர், ஏசி ஸ்லீப்பர், வால்வோ ஸ்லீப்பர், ஏசி சீட்டர் என 6 வகைகளாகக் கட்டணம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை- கோவை இடையே குறைந்தபட்சக் கட்டணமாக 1,724 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணமாக ரூபாய் 2,874 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை- நெல்லை இடையே குறைந்தபட்சக் கட்டணம் 1,959 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 3,266 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை- மதுரை இடையே குறைந்தபட்சம் 1,505 ரூபாயும், அதிகபட்சம் 2,508 ரூபாயும் பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி இடையே குறைந்தபட்சம் ரூபாய் 1,325 ரூபாயும், அதிகபட்சம் 1,841 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

சென்னை- சேலம் இடையே குறைந்தபட்சக் கட்டணம் 1,363 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 1,895 ரூபாயாகவும், சென்னை-நாகர்கோவில் இடையே குறைந்தபட்சக் கட்டணம் 2,211 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 3,765 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MUST READ