அமைச்சர் கீதாஜீவன், அவரது கணவர், சகோதரர்கள், தாய் உள்ளிட்ட 5 பேர் விடுதலை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 1996-2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 31 லட்சம் அதிகமாக சொத்து சேர்த்ததாக அப்போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக மாவட்ட செயலாளராக இருந்த என் பெரியசாமி அவரது மனைவி எபனேஸஸ்ரம்மாள் பெரியசாமியின் மகன்கள் ராஜா மற்றும் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருக்கும் ஜெகன் பெரியசாமி தற்போது அமைச்சராக இருக்கும் கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் ஜீவன் மற்றும் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கும் கீதா ஜீவன் ஆகியோர் மீது கடந்த 2003 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடிமாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திருநெல்வேலி- லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த டிஎஸ்பி பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 19 ஆண்டு காலம் விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதுதிமுக மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி மரணம் அடைந்து விட அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமிஉள்ளிட்ட ஐந்து பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலை ஐந்து பேரும்ஆஜராயினர். இதைத் தொடர்ந்துவழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி இந்த
வழக்கில் குற்றச்சாட்டு குறித்து எவ்வித ஆதாரமும் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஐந்து பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பின்னர் நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கால் புணர்ச்சி காரணமாக அதிமுகவினரால் தொடரப்பட்ட வழக்கில் நியாயம் விளைந்துள்ளது என கூறினார்.