Homeசெய்திகள்தமிழ்நாடுதீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்

-

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபோது தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தரை தீயணைப்புத் துறையினர் ஓடிச்சென்று உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீமிதி

சிதம்பரத்தில் அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். நேற்று இரவு இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா நடந்து கொண்டிருந்தபோது ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது பக்தர் ஒருவர் தீக்குழிக்குள் நடந்து தீ மிதித்தபடி வந்தார். திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தீக்குழிக்குள் தலைக்குப்புற தவறி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மின்னல் வேகத்தில் அங்கு நின்று கொண்டிருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீக்குழிக்குள் இறங்கி கீழே விழுந்தவரை தூக்கி, மேலே அழைத்து வந்தனர். பின்னர் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ