தனது கால்கள் செயலிழந்தும் சக்கர நாற்காலியில் சென்று “ரூ.10 மட்டுமே தன்னுடைய கட்டணமாக வாங்கும் மருத்துவர்”.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் ஆறுமுகம். இவருடைய வயது 70. இவர் விஷக்காய்ச்சலால் தனது கால்கள் செயலிழந்த நிலையிலும் சக்கர நாற்காலில் சுழன்ற படி மருத்துவ சேவையை மக்களுக்காக செய்து வருகிறார்.மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பொது மருத்துவம்,மூளை நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும் 10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறார் டாக்டர் ஆறுமுகம்.
ஏழ்மையான நோயாளிகளுக்கு அவரது மருத்துவமனையிலேயே உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி சிகிச்சையும் அளித்து வருகிறார்.
தனது தந்தையின் கனவை நிறைவேற்றவே 10 ரூபாய்க்கு சிகிச்சை அளிப்பதாகவும்,என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும் கூறினார்.மேலும், ” சிகிச்சைப் பெற்ற நோயாளிகள் குணமடைந்த பிறகு கூறும் வார்த்தைகள் நீங்கள் நல்லா இருங்கள் டாக்டர் என்பது தான் தனக்கு வருமானம் என்றும் ”, கூறுகிறார் டாக்டர்.