spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்

இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்

-

- Advertisement -

இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மே பதினான்காம் தேதி நடைபெற்றவுள்ளது.  ஐபில் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. இதற்காக இரவு பத்து மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நிற்க தொடங்கினர்.

இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்
மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்

இந்த நிலையில் சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில்  ஐபிஎல் டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற 2 குழந்தைகளுடன் வந்த தாய், ஒரு மூதாட்டியிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார்.

we-r-hiring

அப்போது ஒன்றரை மணி நேரம் ஆகியும் குழந்தைகளை பெற தாய் வராததால் அந்த மூதாட்டி காவல் துறையின் உதவியை அணுகினார். காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் குழந்தைகளின் தாயை அழைத்தனர்.

இந்நிலையில் குழந்தையின் பாட்டி எனக் கூறி ஒருவர் வந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. விசாரணைக்கு பின்னர் குழந்தைகளை அவர்களது பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர் அந்தக் குடும்பத்தை எச்சரித்து அனுப்பினர்.

 

MUST READ