Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை

-

- Advertisement -

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

we-r-hiring

அப்போது, பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்பட்ட உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் கூறுகையில்,

இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு சந்தை, வணிக வாகனம் நிறுத்தும் இடத்தில் 3.5 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அங்காடி நிறுவனத்தால் நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி, கோயம்பேடு மார்க்கெட்க்கு அதிக மக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் குடிநீர், கழிப்பறை மற்றும் ஊழியர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள்  ஏற்படுத்துவதை முதல் குறிக்கோளாக எடுத்துள்ளோம்.

அதற்காக 2021 – 22 மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படும்.

மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உள்ளோம்.

அதேபோல், திருமழிசை மொத்த மார்க்கெட் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கோயம்பேட்டில் உள்ள கடைகள் அங்கு இடமாற்றம் செய்வது குறித்து வியாபாரிகளுடன் கலந்து விரைவில் ஆலோசனை செய்து  முடிவு எடுக்கப்படும்.

 

MUST READ