Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மாறும் அரசியல் சூழல்: தவெக அரசின் 100 நாட்கள் மற்றும் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து...

தமிழகத்தில் மாறும் அரசியல் சூழல்: தவெக அரசின் 100 நாட்கள் மற்றும் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ். லட்சுமணன் காரசாரம்!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நிர்வாகம், அஇஅதிமுக எதிர்கொள்ளும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த பல்வேறு முக்கிய அம்சங்களை மூத்த பத்திரிகையாளர் எஸ். லட்சுமணன் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மாறும் அரசியல் சூழல்: தவெக அரசின் 100 நாட்கள் மற்றும் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ். லட்சுமணன் காரசாரம்!

we-r-hiring

தவெக அரசின் 100 நாட்கள்: பாராட்டுகளும் விமர்சனங்களும்
தவெக அரசின் 100 நாள் ஆட்சி நிர்வாகத்தைக் ‘கலவையான ஒன்றாகவே’ பார்ப்பதாகக் குறிப்பிட்ட எஸ். லட்சுமணன், கட்சி நிதி திரட்டுவதில் 90 சதவீதம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதையும், ஊழலை ஒழிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள முடிவுகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதேவேளையில், நிர்வாக ரீதியான தவறுகள் மற்றும் அசம்பாவிதங்களின்போது அரசு மௌனம் காப்பது சரியல்ல என்றும் சாடினார். “முன்பு கரூரில் அஜித் என்ற இளைஞர் இறந்தபோது நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய், நாகர்கோவில் சிறைத்துறை மரணம் போன்ற விவகாரங்களில் ஒரு இரங்கல் அறிக்கைகூட வெளியிடாதது ஏன்? தவறு நடக்கும்போது பொறுப்பேற்றுப் பேசுவதே தார்மீகப் பொறுப்பாகும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “அரசியல் அனுபவக் குறைபாடுகள் மற்றும் சட்டப்பேரவைச் சூழல்களை விஜய் படிப்படியாகக் கற்றுக்கொண்டு வருகிறார். எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்பும்போது அமைதி காப்பது அவரது முதிர்ச்சியைக் காட்டினாலும், முதலமைச்சர் இன்னும் அதிக அளவில் சட்டமன்றத்தில் பேசித் தன் கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்” என்றார்.

அதிமுகவின் பலவீனம்: பயன்பெறுகிறதா தவெக?
அஇஅதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதப் போக்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த லட்சுமணன், “தேர்தல் தோல்விக்குப் பிறகும் தன் தவறை உணராமல், 41 எம்.எல்.ஏ-க்களைக்கூட ஒருங்கிணைக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தடுமாறுகிறார். அஇஅதிமுகவின் இந்த பலவீனத்தை தவெக சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் அஇஅதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்” என்று எச்சரித்தார்.தமிழகத்தில் மாறும் அரசியல் சூழல்: தவெக அரசின் 100 நாட்கள் மற்றும் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ். லட்சுமணன் காரசாரம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்குச் சிக்கல்?
அதேநேரத்தில், அஇஅதிமுகவிலிருந்து தவெகவுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு தவெகவில் பெரிய அளவிலான முக்கியத்துவமோ அல்லது அதிகாரமிக்க பதவிகளோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “வெளியிலிருந்து வருபவர்களுக்கு முக்கியப் பதவிகளைக் கொடுத்துத் தங்களது சொந்தக் கட்சியைக் கபளீகரம் செய்ய விஜய் அனுமதிக்க மாட்டார். எனவே, அங்கேயும் சில அதிருப்திச் சூழல்கள் நிலவுகின்றன. இதனைப் புரிந்து கொண்டு பிரிந்து சென்றவர்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அரவணைத்துச் செல்லாவிட்டால், அஇஅதிமுக மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்,” எனத் தெரிவித்துள்ளாா்.

விஜய் அரசின் 100 நாள் ஆட்சி: ‘வெளிப்படைத்தன்மை குறைவு’ என மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சனம்

MUST READ