தமிழகத்தில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நாடகங்கள், அதிகார மமதை மற்றும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் செயல்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற போக்கையும், அடிமைத்தனமான புகழ்ச்சி அரசியலையும் அரசியல் விமர்சகர் சேகுவாரா ஜெயசங்கர் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
பதவிகளைத் தாரைவார்க்கும் nepotism: மண்ணின் மைந்தர்களுக்கு ஏமாற்றம்!
இந்து அறநிலையத்துறை முதல் முக்கிய வாரியப் பதவிகள் வரை தகுதியானவர்களையும், மண்ணின் மைந்தர்களையும் ஓரங்கட்டிவிட்டு, தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகளை வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்? டெல்லி பிரதிநிதி நியமனம் தொடங்கி, அறங்காவலர் குழு நியமனங்கள் வரை தமிழர்களின் உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது. “ஆந்திராவிலோ அல்லது கர்நாடகாவிலோ தமிழர்களுக்கு இப்படிப்பட்ட உயர் பதவிகள் கிடைக்குமா?” என்ற நியாயமான கேள்வி இங்கே எழுப்பப்பட்டுள்ளது.

சட்டமன்றமா அல்லது மத வழிபாட்டுத் தலமா? – ஆபத்தான அடையாள அரசியல்!
“புனிதமான சட்டமன்ற வளாகத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், தங்களின் மத அடையாளங்களை முன்னிறுத்திப் பேசுவதும், அதனை ஆளுங்கட்சியினர் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தமிழகத்தைப் பெரும் ஆபத்தை நோக்கித் தள்ளுகிறது. 1991–96 காலக்கட்ட ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக உருவான அதே மக்கள் கோபமும் எதிர்ப்பு அலையும், தற்போது உள்ள ஆட்சியாளர்களின் இந்த பக்குவமற்ற நடவடிக்கைகளால் மெல்ல மெல்ல மீண்டும் உருவாகி வருவதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர்.”
அரசாங்கத்தின் அடிமைப் புகழ்ச்சி: வெட்கக்கேடான மரபு மீறல்!
சட்டமன்றத்தை ஒரு விவாத மேடையாக மாற்றாமல், அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சரை வானளாவப் புகழ்ந்து தள்ளும் தாள்பாட்டும் போக்கு எல்லை மீறிச் செல்கிறது. “சூரியனுக்கே வேர்க்கிறது” என்ற ரீதியில் அமைச்சர்கள் அடிமைத்தனமாகப் பேசும் பேச்சுகள் மக்களைச் சிரிக்க வைப்பதா அல்லது வெட்கப்பட வைப்பதா? அவைக் குறிப்பில் பதிவிற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படும் பொதுமக்களின் வரிப்பணம், இதுபோன்ற தரம்கெட்ட புகழ்ச்சிகளுக்கா வீணடிக்கப்படுகிறது?
தொகுதி மறுசீரமைப்பு:இரட்டை வேடமும் தர்மசங்கடமும்!
வடமாநிலங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, மத்தியக் கூட்டணியின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மௌனம் காக்கும் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு தமிழகத்திற்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம். ஒருபுறம் தீர்மானத்தை ஆதரிப்பது போல நாடகமாடிவிட்டு, மறுபுறம் கூட்டணிக் கணக்குகளுக்காக வாயமூடிக்கிடக்கும் அரசியல் நாடகங்களை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும், மண்ணின் உரிமைகளையும், தமிழ் மொழி மரபுகளையும் சிதைத்துவிட்டு, வெறும் விளம்பர அரசியலாலும் அடிமைப் புகழ்ச்சிகளாலும் தமிழகத்தை ஆண்டுவிட முடியாது. இனியாவது ஆட்சியாளர்கள் சுயநல அரசியலை விடுத்து, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்; இல்லையேல், மக்கள் தக்க சமயத்தில் உரிய பாடம் புகட்டுவது உறுதி!
விஜய் அரசின் 100 நாள் ஆட்சி: ‘வெளிப்படைத்தன்மை குறைவு’ என மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சனம்
