
ஆவின் 500 மி.லி. பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மேலாண்மை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?
இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விலை உயர்வு என்ற தலைப்பில் தொலைக்காட்சிகளில் 200 மி.லி. பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள், இனி வைலட் நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் எனவும் செய்தி வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தினசரி 33,700 லிட்டர் பால் பாக்கெட்டுகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட்டுகள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!
அதில், எவ்வித மாற்றமும் இல்லை எனவும், ஆவின் டிலைட் பாலின் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால், நிறை கொழுப்பு பால், ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.