Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

-

- Advertisement -

தலையில் உண்டாகும் பொடுகு என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பொடுகு பூஞ்சையினால் உருவாகிறது. ஆண்கள், பெண்கள் இரு பாலருக்குமே இந்த பொடுகு பிரச்சனை இருந்து வருகிறது. அதனால் பலரும் சமூக வலைதளங்களில் பொடுகு தொல்லையை நீக்க என்ன செய்வது என்று அடிக்கடி தேடி  பார்த்து, பல முயற்சிகளை செய்து பார்ப்பது உண்டு. சிலருக்கு பொடுகு சில காலங்களில் சரியாகிவிடும். ஆனால் பலருக்கு இது தீரா பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதற்கு தீர்வளிக்கும் விதமாக தற்போது எங்கள் பாட்டி சொன்ன நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பகிர்கிறேன். இதை செய்து பொடுகுக்கு டாட்டா சொல்லுங்கள்!

  1. மூன்று கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலைகளை நன்கு கழுவி எடுத்து அதனை பசை போல் அரைத்துக் கொள்ளவும். பின் அதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகு குறைய ஆரம்பிக்கும்.

2. மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலை, நீலீ இலை இவை ஒவ்வொன்றையும் 3 கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து அதன் சாறை பிழிந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நெல்லிக்காய், அதிமதுரம், கடுக்காய் மூன்றையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றிலும்
தலா 50 கிராம் எடுத்து அத்துடன் 600 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து 150 மில்லி லிட்டராக குறையும் வரை சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை செய்து பொடுகுக்கு டாட்டா சொல்லுங்கள்!

இந்த கசாயத்தை ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இலைகளின் சாற்றுடன் 200 மில்லி லிட்டர் சுத்தமான பால் மற்றும் 200 மில்லி லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து பெரிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றி எண்ணெய் மட்டும் மிஞ்சும் வரை காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணைய்யை வாரத்திற்கு மூன்று முறை தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனை தீரும். இந்த எண்ணெய் நீளமான, அடர்த்தியான முடி வளர்வதற்கும் உதவுகிறது.

ஒருமுறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தஒரு ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

MUST READ