spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவையான தேங்காய் கேக் செய்வது எப்படி?

சுவையான தேங்காய் கேக் செய்வது எப்படி?

-

- Advertisement -

தேவையான பொருள்கள்:

முற்றிய பெரிய தேங்காய் – 4
வெண்ணெய் – 1/4 கிலோ
ஏலக்காய் – 10
சர்க்கரை – 3/4 கிலோ
ரவை – 100 கிராம்

we-r-hiring

செய்முறை :

தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.How to make Coconut Cake?

பிறகு ரவையை லேசாக வருத்துக்கொள்ளவும். பின் துருவிய தேங்காயை நன்றாக வதக்கி எடுத்து, அதனுடன் ரவையை சேர்த்து கிளறி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். மேலும் ஏலக்காயை பொடி செய்து அரைத்து வைத்துள்ள கலவையில் கலக்கவும்.How to make Coconut Cake?

அதன் பின் சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக பாகு போன்று காய்ச்சி, பாகு பதமாக வந்தவுடன் கலவையை பாகில் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பிறகு அந்த கலவையை அகலமான தட்டில் பரப்பி ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் கேக்கை கட் செய்து கொள்ளவும். சுவையான தேங்காய் கேக் ரெடி.

MUST READ