Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

"பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு....கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாலாவை திட்டிய நடிகை… படம் பார்த்துவிட்டு காலில் விழுந்து கதறி அழுகை…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 12- ஆம் தேதி உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும், பிப்ரவரி 20- ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

மகனை இயக்கும் முத்தையா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..

அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் இன்று (பிப்.22) பதிலளித்த நிலையில், சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

MUST READ