- Advertisement -
பிரபல இயக்குநர் முத்தையா, அவரது மகன் விஜய் முத்தையாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.
தமிழில் கமர்ஷியல், காதல் என பல படங்கள் கலக்கலாக வந்தாலும், கிராமத்து பின்னணியில் திரைப்படங்களை உருவாக்கி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் முத்தையா. மண் மனம் மாறாமல் படம் இயக்கும் இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். குட்டிப்புலி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முத்தையா, அடுத்து, கார்த்தியை வைத்து கொம்பன், விஷாலை வைத்து மருது, சசிகுமாரை வைத்து கொடி வீரன், விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.
