spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகைதிக்கு எதற்கு அமைச்சர் பதவி?- ஜெயக்குமார்

கைதிக்கு எதற்கு அமைச்சர் பதவி?- ஜெயக்குமார்

-

- Advertisement -

கைதிக்கு எதற்கு அமைச்சர் பதவி?- ஜெயக்குமார்

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும்? அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும், பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும். செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எவ்வித தகுதியும் இல்லை. சமூகநீதி மற்றும் திராவிடம் குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை.

we-r-hiring

Image

மாமன்னன் சுத்த ஃப்ளாப் படம், திமுகவினர் தான் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கிறார்கள். பொதுமக்கள் யாரும் பார்க்கவில்லை. நூற்றாண்டு திரைப்படம் என்று அவர்கள் புகழை அவர்களே பாடிக் கொள்ள வேண்டியதுதான். உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. இன்றைய முதல்வர் அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு நிலையில் இருந்தார். தற்போது ஒரு நிலையில் இருக்கிறார். அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது, திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

 

MUST READ