Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ்க்கு அதிமுகவுடன் தொடர்பு இல்லை - ஜெயக்குமார்

ஓபிஎஸ்க்கு அதிமுகவுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார்

-

- Advertisement -

ஓபிஎஸ்க்கு அதிமுகவுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார்

ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. விசாரணைக் கைதியாக இருப்பவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும். இலாகா இல்லாத அமைச்சர் எதற்கு? ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. தனது மகன் வெற்றி பெற்றால் போதும் என நினைத்தால்தான் ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார். அண்ணாமலை தவறை திருத்திக் கொண்டுள்ளார். அண்ணாமலை இனி அதிமுக பற்றி விமர்சனம் செய்ய மாட்டார் என நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை.

jayakumar

செந்தில்பாலாஜி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுவருகிறது. அரசியல் பழுவாங்கும் நடவடிக்கையில் ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார். அதிமுகவை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்றார்.

MUST READ