Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் வசூல் அனைத்து ஒரே குடும்பத்திற்கு செல்கிறது- ஜெயக்குமார்

டாஸ்மாக் வசூல் அனைத்து ஒரே குடும்பத்திற்கு செல்கிறது- ஜெயக்குமார்

-

டாஸ்மாக் வசூல் அனைத்து ஒரே குடும்பத்திற்கு செல்கிறது- ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

"மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
File Photo

சென்னை பல்லவன் இல்லத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். செந்தில்பாலாஜி வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடையாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் டாஸ்மாக் அரசாக திமுக அரசு மாறி உள்ளது. டாஸ்மாக் வசூல் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்கிறது.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

மாஸ்டர் ஸ்டாலினின் வாய்ஸ் ஆக பன்னீர்செல்வம் பிரதிபலிக்கிறார். MGR மாளிகை எப்படிபட்டது.. அங்க போய் ஓபிஎஸ் செஞ்சத எப்படி தொண்டன் ஏத்துப்பான்? கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக” என்றார்.

MUST READ