Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

-

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை? ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்ற வாக்குறுதி என்னவானது? நீட் தேர்வு மசோதா தொடர்பாக எத்தனை முறை திமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவரை சந்தித்தார்கள்? தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம். குடும்ப நலனுக்காக மட்டுமே திமுக குரல் கொடுக்கிறது. தமிழக நலனுக்காகவோ, உரிமைக்காகவோ, திமுக எந்த குரலும் கொடுக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்தது அதிமுக.

உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுச் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் அவரின் செயல் வருத்தத்திற்குரியது. துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள் என கூறியவர்தான் திருநாவுக்கரசு. எம்பி சீட்டுக்காக வரலாற்றை மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல் தலைதூக்கி உள்ளது” என்றார்.

MUST READ