Homeசெய்திகள்தமிழ்நாடுஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் - அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து!

ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் – அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து!

-

- Advertisement -

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ