Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

-

- Advertisement -

அஸ்ரா கர்க், தேன் மொழி, செந்தில் வேலன் என மூன்று ஐஜிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

we-r-hiring

நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வீர தீர செயல் புரிந்த காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது, மெச்ச தகுந்த காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது மற்றும் மெச்சத்தக்க சேவையாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது என மூன்று பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 901 காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது தமிழகத்தை சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன்ராமு மற்றும் அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரன் ஆகிய மூன்று அதிகாரிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல ஐஜி அஸ்ரா கர்க், உளவு துறை ஐஜி செந்தில் வேலன், திருநெல்வேலி நகர காவல் ஆணையர் அவிநாஷ் குமார், சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் மணிவண்ணன், பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எஸ்பி சாமிநாதன், எஸ்பி சங்கரன், உள்ளிட்ட 21 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ