Homeசெய்திகள்தமிழ்நாடுஆக.18-ல் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீடு!

ஆக.18-ல் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீடு!

-

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி மத்திய அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட உள்ளது. கலைஞரின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள இந்த நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட உள்ளார். கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அரசு சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

MUST READ