Homeசெய்திகள்தமிழ்நாடுகலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

-

- Advertisement -

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். கடைசி நாளில் மட்டும் 5865 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொருக் கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

நாளை முதல் 30 ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும், 2 ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ