ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி கணக்கு புத்தகத்துடன் இணைக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் நாளை கடைசி நாள் என்பதால் இணைக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் எண் இணைக்காவிடில் அவர்களின் ஊதியமானது வங்கி கணக்கில் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
குளங்களை தூர்வாருவதும்,கால்வாய்களை பராமரிப்பதும், அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
இந்த 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியமானது, 2 முறைகளில் வழங்கப்பட்டு வந்தது. ஒன்று வங்கிக் கணக்கு அடிப்படையிலும், மற்றொன்று ஆதார் கணக்கு அடிப்படையிலும், ஊதியம் வழங்கப்படுகிறது.. இதனால், வங்கிக் கணக்கின் கீழ், பணியாளர்கள் அளித்த வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.
இந்நிலையில்,” கடந்த ஜனவரி 30-ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும்/யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டைருந்தது. அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது”, என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
ஆனாலும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க கால வரம்பு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் 31-ம் தேதி அதோவது நாளையே கடைசி தேதியாகும்.. அதனால், வரும் நாளைக்குள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, இணைக்கப்பட்ட வங்கிக்கிளை அலுவலகத்துக்கு சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.