spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி

காசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி

-

- Advertisement -

காசநோய் எதிர்ப்பு வாரம் கடைபிடிப்பதை ஒட்டி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு பேரணிகள் நடைப்பெற்று வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமிமுரளி தலைமையில், பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுலோசனா, ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

we-r-hiring

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி, திருவள்ளூர் சாலை, பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியே சுற்றி  மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.

இதில் மாணவியர், ‘டிபி நோய் தோற்கும், நாடு வெல்லும், காச நோயாக இருக்கலாம், காசநோய் வராமல் தடுக்க பொதுமக்கள் இரும்பும் போதும், தும்பும் போதும், வாயில் துணியை வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியர்கள் ஏந்திச் சென்றனர்.

MUST READ