Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்!

அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்!

-

 

தீர்ப்பில் 'மாமன்னன்' படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
File Photo

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!

வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் மதுரை வரவுள்ளதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடைக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநாடு நடத்துவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மைச் சான்றுப் பெறவில்லை என மனுதாரர் சேதுமுத்துராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். விமான நிலையத்தைச் சுற்றியப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளதால், மாநாட்டிற்கு வருவோரால் விமான சேவையில் இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மாநாட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ