Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

-

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

we-r-hiring

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சமீபத்திய தரவுகளின்படி, 2024–25 நிதியாண்டில் 11.19 சதவீத வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு, 2025–26 நிதியாண்டிலும் 10.83 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்த வளர்ச்சி இந்திய அளவில் குறிப்பிடத்தக்கதாகும். சில மாநிலங்களின் முழுமையான தரவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையிலும், தற்போதைய கணக்கீடுகளின் அடிப்படையில் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சாதனை குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக “திராவிட மாடல்” ஆட்சியின் கீழ் தமிழ்நாடு வலுவான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திட்டமிட்ட முன்னேற்றம் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக இந்த சாதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழ்நாடு, இவ்வளவு வேகத்தில் தொடர்ந்து வளர்வது உலகளாவிய அளவிலும் அரிதான ஒன்று எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், இந்த வளர்ச்சி 15 முதல் 20 ஆண்டுகள் நீடித்தால், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் வளர்ச்சி பாதையை தமிழ்நாடும் அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அரசு முன்வைத்துள்ளது. இந்த இலக்கை அடைய அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் வளர்ச்சி தொடரும் என்றும், முதலீடு, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் உள்ள சுங்கவரி (tariff) போன்ற சவால்கள் இல்லையெனில், தமிழ்நாட்டின் வளர்ச்சி இதைவிட அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் தனித்துவமான மாடல்! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்

MUST READ