வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன் படி, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய கியூஆர் (QR) கோடு பதிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி, Returning Officers, உதவி Returning Officers, எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agents) உள்ளிட்ட அனைவரும் QR கோடு கொண்ட அடையாள அட்டையை தவறாமல் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அனுமதி பெற்றவர்களையே மையத்திற்குள் அனுமதிக்க முடியும்.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் இரண்டு கட்டங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும். இறுதி கட்டத்தில் QR கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே நுழைவு அனுமதி வழங்கப்படும். இந்த முறையால் போலி அடையாள அட்டைகள் அல்லது அனுமதியில்லாத நுழைவுகளை தடுப்பது எளிதாகும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை முழுமையாகத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய QR கோடு அடையாள அட்டை முறை, வாக்கு எண்ணும் செயல்முறையின் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்துவதுடன், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
