ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. பொதுமக்கள் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் நிலையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்து உள்ளது.
மாம்பழங்கள் அதிக லாபத்துக்காக விற்பனை செய்வதற்கு ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
படங்கள் மூலம் வழிகாட்டும் சாலை பலகைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி..
