சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இதனைச் சரிசெய்ய, சென்னையின் 300 முக்கியச் சாலைகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழ் தெரியாதவர்கள் அல்லது வெளிமாநிலத்தவர்கள் கூட எளிதாகத் சாலைகளை அறிந்துகொள்ள முடியும்.
விபத்து பகுதிகள், பள்ளிக் குழந்தைகள் கடக்கும் இடங்கள், வேகத்தடைகள் ஆகியவற்றைப் படம் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி. இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிக்கற்றை பட்டைகளுடன் (ரிப்ளெக்ட்டிவ்) இந்தப் பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அண்ணா நகர் போன்ற பகுதிகளின் பெயர்கள் திரையில் தோன்றும்.
முதற்கட்டமாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகளில் இந்தப் புதிய பலகைகள் நிறுவப்பட உள்ளன. புதிதாக விரிவுபடுத்தப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் சாலை உட்கட்டமைப்பு வளர்ந்த அளவிற்கு வழிகாட்டிப் பலகைகள் இல்லை என்ற பொதுமக்களின் நீண்ட காலப் புகாருக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
