Homeசெய்திகள்சென்னைசென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை... அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த...

சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!

-

- Advertisement -

மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள் திரண்டு ‘மெரினா… மெரினா…’ என ஆவேசமாக முழக்கமிட்ட சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை... அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!

​சென்னையின் முதன்மைப் பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரை மூடப்பட்டதற்குப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ​இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும், அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் அவரை நோக்கித் திடீரென முற்றுகையிடும் தொனியில் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.  மேலும், ​”மெரினா கடற்கரையை மூடி பொதுமக்களின் உரிமையைப் பறிப்பதா?”​— எனக் கூறி, ‘மெரினா… மெரினா…’ எனத் தொடர்ச்சியாக முழக்கமிட்டு இளைஞர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை... அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!

we-r-hiring

​தவெக அரசுக்கு எதிராகப் பாய்ந்த முழக்கங்கள்
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, அதை உடனடியாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக இளைஞர்கள் திரண்டு ஆவேசமாகச் சுலோகங்களை எழுப்பினர். அமைச்சர் ராஜ்மோகன் சென்ற பாதையில் இளைஞர்கள் இந்தத் திடீர் எதிர்ப்பைப் பதிவு செய்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் சலசலப்பும் பரபரப்பான சூழலும் நிலவியது.

அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!

MUST READ