சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகர் கடற்கரை யில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யே க மரப்பலகை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாற்றுத் திறனாளிகளுடன்
கலந்துரையாடினார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம்
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும், மாற்றுத் திறனாளின் நலனுக்காக அரசு தொடர்ந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்துள்ளதாகவும், அந்த பாதையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் தினமும் மெரினாவை ரசித்து வருவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டியதாகவும், அதன்படி 1 கோ டியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 189 மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போது 40 சதவீத பணிகள் முடிவடைதுள்ளதாகவும், எஞ்சிய பணியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து பொங்கல் பண்டிகைக்கு முன்பு பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார்.
மேலும், பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர், வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமை க்கப்பட உள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.