spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிடிஎஃப் வாசனை ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்க- பாஜக

டிடிஎஃப் வாசனை ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்க- பாஜக

-

- Advertisement -

டிடிஎஃப் வாசனை ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்க- பாஜக

டிடிஎஃப் வாசனை ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

சாகச பயணத்தின் போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்ற போது, நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானர். இதில் பலத்த காயமடைந்த அவர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிவருகிறார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

Complete drama...": TN BJP leader Narayanan Thirupathy on Senthil Balaji's  hospitalisation post ED custody

இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் காயமடைந்துள்ளார் என்று ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ