Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை – தமிழ்நாடு அரசு விளக்கம்!

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை – தமிழ்நாடு அரசு விளக்கம்!

-

- Advertisement -

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை விடுவிப்பதில் எவ்விதத் தாமதமும் இல்லை எனத் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை – தமிழ்நாடு அரசு விளக்கம்!

366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதி

we-r-hiring

நடப்பு ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 366 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடங்கியுள்ளனர்.

ரூ.30.24 கோடி விடுவிப்பு

பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களில் 84 பேருக்கு இதுவரை கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.30.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதாக எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மாணவர்களின் சேர்க்கை நிலவரம் மற்றும் இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி விவரங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம்: திமுக – தவெக அரசு இடையே கடும் மோதல்! 365 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே நிதியா?

MUST READ