தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு நலனைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
பொதுத்தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற இன்னும் சுமார் 3 மாத கால இடைவெளியே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தனியார் பள்ளிகள் சங்கம், இந்தக் குறுகிய காலத்தில் மாணவர்கள் பாடங்களை முழுமையாகப் படித்து தேர்ச்சி பெறுவதற்கு கூடுதல் பயிற்சி அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி கோரிக்கை
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, பொதுத்தேர்வுக்குத் தயாராகும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் இந்தக் கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
