Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 விலை உயர்வு: எதிர்த்து கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் சங்கம் வழக்கு –...

டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 விலை உயர்வு: எதிர்த்து கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் சங்கம் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை எதிர்த்து, கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 விலை உயர்வு: எதிர்த்து கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் சங்கம் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்

we-r-hiring

மதுபான பாட்டில்களைப் பயன்படுத்திய பிறகு பொது இடங்களில் வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, மதுபானம் விற்பனை செய்யும்போது ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார்.

இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்யும் எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கிளப்கள், நட்சத்திர விடுதிகள் முன்வைக்கும் சிக்கல்

இந்த வழக்கு மனுவில், 2022ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலச் செஸ் வரியாக நவம்பர் 1ஆம் தேதி முதல் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளப்களில் வாங்கப்படும் மதுபான பாட்டில்களை உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதால், காலி பாட்டில்களை மீண்டும் கிளப்களிடம் ஒப்படைப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இதனால், காலி பாட்டில்களைத் திரும்பப் பெற்று டாஸ்மாக் நிறுவனத்திடம் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ரூ.10 கூடுதல் வசூல் நடைமுறையில் மாற்றம்

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை நிறுத்திவிட்டு, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை ரூ.10 உயர்த்தி கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெற்று, அதற்கான ரூ.10 தொகையை வழங்குவதற்காக ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் செஸ் வரி விதிப்பதால் தங்களது கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும், கிளப்களுக்கு இத்தகைய செஸ் வரியை விதிக்க முடியாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அரசு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனு தொடர்பாக தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

டாஸ்மாக் வருமானம் சாதனை அல்ல; வெட்கப்பட வேண்டிய விஷயம் – மதுவின் தீமைகளை உளவியல் ரீதியாக எடுத்துரைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விக்னேஷ்!

MUST READ