spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி 20 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்- காவேரி மருத்துவமனை

செந்தில் பாலாஜி 20 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்- காவேரி மருத்துவமனை

-

- Advertisement -

செந்தில் பாலாஜி 20 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்- காவேரி மருத்துவமனை

அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

senthilbalaji

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்தில் மூன்று நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21 ஆம் தேதி காலை 05.15 மணிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

we-r-hiring

senthil bal

இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து நல்ல முறையில் தேறிவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 முதல் 20 நாட்களுக்கு கட்டாய மருத்துவக் கண்காணிப்பு தேவை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திரவ உணவிற்கு பதிலாக திட உணவு வழங்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக நடப்பதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள செந்தில் பாலாஜியால், மெல்ல பேச முடிகிறது, ஆனால் இன்னும் எழுந்து இயல்பாக நடமாடமுடியவில்லை. நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில்பாலாஜி தம்பி அசோக் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்கவில்லை” என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ