Homeசெய்திகள்தமிழ்நாடுஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ -...

ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ – நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனியார் ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அவருக்கும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ - நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு

விவாதத்தின்போது நாற்காலிகள் வீசப்பட்டும், கடும் வாக்குவாதம் நிலவியதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நிகழ்ந்தது என்ன?

we-r-hiring

தவெக அரசின் 100 நாள் சாதனை குறித்து நடைபெற்ற விவாதத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் பிற கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விவாதம் தொடங்கிய போதே, திட்டமிட்டு ரவுடி கும்பலை ராஜீவ் காந்தி அழைத்து வந்திருந்ததாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் தவெக கொள்கைகளை முன்வைத்து ஆக்கபூர்வமாகப் பேசச் சென்றேன். ஆனால், அங்கே ஒரு திட்டமிட்ட ரவுடி கும்பல் அமர்ந்திருந்தது.

தவெக ஆதரவாளர்கள் அதிகம் இருந்தும், அவர்களது தூண்டுதலால் அடியாட்கள் மோதலில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

தடித்த வார்த்தை; வருத்தம் தெரிவித்த சம்பத்:விவாதத்தின்போது எதிர்தரப்பினர் கூச்சலிட்டதாலும், தன்னைத் தரக்குறைவாகப் பேசியதாலும் ஆத்திரமடைந்த நாஞ்சில் சம்பத், ஒரு தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கியதால், அந்த ஆதங்கத்தில் நான் அவ்வாறு பேசினேன். அது தவறாக இருக்கலாம், அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், தன்னைத் தவெக தம்பிகள் காப்பாற்றியிராவிட்டால், நிகழ்விடத்திலேயே கொலை செய்யும் அளவுக்கு வன்முறை வெடித்திருக்கும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

நடுநிலையாளரின் மௌனம்:
இந்த மோதல் குறித்து, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாண்டே மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி தெரிவித்துள்ளார். பல விவாதங்களில் பாண்டே நடுநிலையாகச் செயல்பட்டு மோதல்களைத் தவிர்த்துள்ளார். ஆனால், அன்று ஏன் மௌனமாக இருந்தார் என்பது புரியவில்லை.

அவரே நினைத்திருந்தால் இதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும், என்று அவர் குறிப்பிட்டார்.  ஆட்சி குறித்து நாஞ்சில் சம்பத்:இந்த விவாதத்தின் இடையே, தவெக-வின் 100 நாள் ஆட்சியை நாஞ்சில் சம்பத் புகழ்ந்து பேசினார். முதியோர்களுக்கான நடமாடும் மருத்துவமனை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் எனப் பலவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு ‘நல்லாட்சி’ என்று சான்றளித்தார். அதே சமயம், தன் கட்சியில் உள்ள மற்றவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டும், தனக்கு வழங்கப்படாதது குறித்துக் கேட்டபோது, நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, கட்சித் தலைவர் விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே சரி, என்று தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

அரசியல் களத்தில் மாற்றமா? தி.மு.க. ஒரு காலக்கட்டத்தில் கலைஞர் மயமாக்கப்பட வேண்டும் என நினைத்தது போல, தவெக-வின் திட்டங்களை மற்றவர்கள் குறை கூறினாலும், மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள்,” என நாஞ்சில் சம்பத் உறுதியாகக் கூறினார்.

பீகாரில் பிரசாந்த் கிஷோர் பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்திலும் அதேபோன்ற அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.  எது எப்படியோ, ஊடக விவாத மேடைகளில் நடைபெறும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள், தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடையூறாக அமைகிறதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

தேநீர் விருந்தில் கனிமொழி: தி.மு.க. – பா.ஜ.க. இடையே அண்டர்-டேபிள் டீலிங்கா? வெடித்தது அரசியல் சர்ச்சை!

MUST READ