தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில்23.7 செ.மீ. மழை பதிவானது. திரு வி.க.நகர், அம்பத்துர், கொளத்துரில் தலா 22 செ.மீ மழை பதிவாகியுள்ளன. மணலியில் 21 செ.மீ., புழல், அடையாறில் தலா 18 செ.மீ மழை பதவாகியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதா சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.