புதுச்சேரியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரத்திற்கு செய்து, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 15 நிமிடங்கள் தாமதாக காலை 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் புதிய கால அட்டவணைப்படி காலை 9.15 முதல் 9.30 மணி வரை வழிபாடு, பின்னர் 9.30 முதல் பகல் 12.25 மணி வரை 3 பாட வேளைகள் நடைபெறும். காலை 11 மணி முதல் 11.10 வரை இடைவேளை , மதியம் 12.40 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.20 மணி வரை 4 பாட வேளைகள், மதியம் 2.50 முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.