spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் நூற்றாண்டு மாரத்தான்- 73,000 பேர் பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்- 73,000 பேர் பங்கேற்பு

-

- Advertisement -

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்- 73,000 பேர் பங்கேற்பு

சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masu

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் துவங்க உள்ளது. மாரத்தானில் கலந்துகொள்ளும் மக்களுக்கு அன்று அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 1,063 திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

we-r-hiring

மாரத்தான் போட்டிக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவுத்திடலில் வழங்க உள்ளார். அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் வழங்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்துள்ளது. சிறுவனின் தந்தை ஆக்சிஜன் முகக்கவசம் வர தாமதமாகும் என்ற காரணத்தால் தாமகவே முன்வந்து பிளாஸ்டிக் கப்பை வாங்கி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவருகிறது.” என்றார்.

MUST READ