Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி சிவா எழுதிய, 5 நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி சிவா எழுதிய, 5 நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

பொய்களையும், அவதூறுகளையும் உண்மையென நிரூபிக்க பாஜக போராடி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. எழுதிய, 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். முதல் பிரதியை மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கட்சிப்பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் திருச்சி சிவா என்றும், அவர் நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் திருச்சி சிவா என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், தலைவர்களின் வரலாற்றை எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.


கொடி, கொள்கை, சின்னம் என எதிலும் மாற்றமின்றி 75 ஆண்டுகளாக திமுக வெற்றி நடை போடுவதாகவும், நாடாளுமன்றத்தில் 45 ஆண்டுகளுக்குப் பின் தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது என்றால் அது திருச்சி சிவாவின் தனிநபர் மசோதா தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பொய்களையும், அவதூறுகளையும் உண்மையென நிரூபிக்க பாஜக போராடி வருவதாகவும், வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க திருச்சி சிவா போன்றவர்கள் தேவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

MUST READ