spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் தனித்தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

முதலமைச்சரின் தனித்தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் தனித்தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித்தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத் ஃபாசில்… புகைப்படங்கள் வைரல்….

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

இதனிடையே தீர்மானங்களின் மீதான விவாதத்தின் போது பேசிய அவை முனைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “ஜனநாயகத்தைக் காக்கவே தனித்தீர்மானங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. உரிமை பறிப்போகாமல் இருக்க ஒரு தீர்மானம்; ஜனநாயகத்தை காக்க மற்றோரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

பிரம்மயுகம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்… படத்தின் மீது வழக்கு…

அதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், “சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை குறையாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. கொடுத்த 10 கோரிக்கைகளை மத்திய அரசு, நிறைவேற்றினால் ஒரே தேர்தலை ஆதரிப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ