spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

-

- Advertisement -

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!
Photo: TN Govt

வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) தமிழகம் திரும்புகிறார்.

we-r-hiring

அல்லு அர்ஜுன் சகோதரர் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள ‘டெடி’!

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், கடந்த மே 23- ஆம் தேதி அன்று ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்றிருந்தார்.

முதலில் சிங்கப்பூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன், கா.சண்முகம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஆகியோரைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.அதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்துக்கு சென்ற அவர், அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜப்பான் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்பு, புல்லட் ரயில் மூலம் டோக்கியோவுக்கு சென்ற முதலமைச்சர், நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (மே 31) தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பை அளிக்கவுள்ளனர்.

MUST READ