சென்னையில் பொதுமக்களுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அலுவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள அவசரக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மழை தொடர்பான முன்னெச்சரிக்கைப் பணிகள், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை
மழைக்காலத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை
பொதுமக்களிடமிருந்து மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக வரும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், களப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் போட்டியிடுவோம் – அண்ணாமலை திட்டவட்டம்!
