Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

-

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Rain

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

MUST READ