Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஊழல் புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஊழல் புகார்

-

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி, உள்ளிட்ட அமைச்சர் மீது முறைகேடாக டென்டர் ஒதுக்கியது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சியில் கால்நடை துறை மற்றும் அரசு கேபிள் நிறுவன துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் மீது பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய ரகுராத், கடந்த ஆட்சியில் பல்வேறு அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான ஆதரங்களுடன் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதே போல கடந்த ஆட்சியில் கால்நடை துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், துறை ரீதியிலும், தொகுதி சார்ந்த சாலை, நிழற்கூடை அமைத்ததாக கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார், இதற்கான கள ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்து முடித்த பணிகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும், அவரது சொத்து கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

MUST READ