லியோ பட பாடல் – விஜய் மீது புகார்
நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த 22 ஆம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி தான் வரவா என்ற பாடலை படக்குழு வெளியிட்டது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையலும் லியோ படத்தில் வரும் ‘நா ரெடி தான் வரவா’ பாடல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.